Blogroll

ஞாயிறு, 31 ஜூலை, 2011

டவுண்லோட் கீ பிரீஸ் - வேகத்தின் துணை

வழக்கமாக அடிக்கடி திறக்கும் புரோகிராம்களை குயிக் லாஞ்ச் இடத்தில் வைத்து கிளிக் செய்திடுவோம்; அல்லது டெஸ்க்டாப்பில் ஐகான்களை வைத்து, அதன் மீது டபுள் கிளிக் செய்து இயக்குவோம். இப்படி எத்தனை புரோகிராம்களை வைத்துக் கொள்ள முடியும். இந்த வகையில் செட் செய்யப் படாத புரோகிராம் தேவைப்பட்டால், ஸ்டார்ட் மெனு சென்று, ஆல் புரோகிராம்ஸ் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் பெரிய பட்டியல் மற்றும் அதன் பிரிவுகள் தரும் மெனுக்களில் இருந்து புரோகிராம்களை இயக்குவோம். இது அதிக நேரம் எடுக்கும் முயற்சியாகும். பல அப்ளிகேஷன் புரோகிராம் களில் எத்தனையோ ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த புரோகிராம் களைத் திறந்து இயக்குவதற்கும் ஷார்ட்கட் கீகளை அமைத்தால் என்ன என்று உங்களில் பலருக்கு நிச்சயம் ஓர் எண்ணம் தோன்றி இருக்கலாம். அப்படி ஒரு வசதியைத் தருகிறது கீ பிரீஸ் (Key Breeze) என்ற புரோகிராம்.
இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து விட்டால், ஓரிரண்டு கீகளிலேயே நீங்கள் விரும்பும் புரோகிராம் களையும், போல்டர்களையும் திறந்து இயக்கலாம். உங்கள் கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டராக இதனை இன்ஸ்டால் செய்திடவும். மற்ற வகை யூசராக இதனை இன்ஸ்டால் செய்திட முடியாது. அட்மினிஸ்ட் ரேட்டராக ஒரு நிமிடத்தில் இதனை இன்ஸ்டால் செய்திட முடிகிறது.
இன்ஸ்டால் செய்த பின்னர், இந்த புரோகிராமிற்கு என அமைக்கப்பட்ட ஹாட் கீ (;) யினைப் பயன்படுத்துங்கள். இந்த கீயினை அழுத்தியவுடன், ஒரு பாப் அப் பாக்ஸ் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் புரோகிராமின் பெயரை டைப் செய்து என்டர் செய்தால், அந்த புரோகிராம் உடன் இயங்கத் தொடங்கும்.
இன்னொரு வழியும் உள்ளது. நீங்களே, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களுக்கு சுருக்குச் சொற்களை அமைக்கலாம். இந்த சொற்களைப் பயன் படுத்தி புரோகிராம்களைத் திறக்கலாம். இதே போல போல்டர்களுக்கும் சுருக்குச் சொற்களை செட் செய்து திறக்கலாம்.
கி பிரீஸ் புரோகிராமினை இயக்குகையில் ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு தரும் வகையில், அடிக்கடி கேட்கப் படும் கேள்விகள் பிரிவு ஒன்றும் தரப்பட்டுள்ளது.
சுருக்கமான கீகளைப் பயன்படுத்தி, நேரத்தை மிச்சப்படுத்தி, புரோகிராம்களை இயக்க விரும்புபவர்கள், இந்த புரோகிராமினைப் பயன்படுத்தலாம். இதனைப் பெற http://www.keybreeze.com/download/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும். பிளாஷ் ட்ரைவில் எடுத்துச் சென்று பயன்படுத்துவதற்கென தனியே ஒரு புரோகிராமினை இந்த தளத்தில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ள லிங்க் தரப்பட்டுள்ளது. யு.எஸ்.பி. பதிப்பு என இது பெயரிடப்பட்டுள்ளது. நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

வெள்ளி, 29 ஜூலை, 2011

உங்கள் படத்தை இனி Google தளத்தில் தேடலாம்


கூகுளில் உள்ள வசதிகளை விவரிக்க வேண்டுமென்றால் அதற்க்கு ஒரு புத்தகமே எழுத வேண்டும்.அந்த வகையில் பயனர்களுக்கு தினமும் ஒரு புதிய சேவையை வழங்கி வருகிறது.அந்த வரிசையில் கூகிள் இமேஜில் புதிய வசதியாக Search by Image என்ற onrai வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் நம்முடைய படத்தை நாமே கூகுளில் தேடி பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வசதியை பெற google இமேஜ் கிளிக் செய்யவும். பின்பு அங்கு வரும் பக்கத்தில் கேமரா போன்ற ஐகான் வரும் அதில் கிளிக் செய்தால் upload an Image என்பதில் கிளிக் செய்து உங்கள் படத்தை அப்லோடு செய்து பின்பு உங்கள் படத்திற்கான குறிச்சொல்லை கொடுத்து தேடுங்கள் உங்கள் படம் தேடல் முடிவில் கிடைக்கும்.

நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

புதன், 27 ஜூலை, 2011

விண்டோஸ் எக்ஸ்பி


விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வந்த பின்னரும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்தி வருவது குறித்து, இந்த பகுதியில் முன்பே குறிப்பிட்டி ருந்தோம். பாரஸ்டர் என்னும் ஆய்வு நிறுவனம், சென்ற மார்ச் வரையிலான காலத்தில் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் பயன்பாட்டில் உள்ளன என்று ஒரு கணிப்பினை மேற்கொண்டு அண்மையில் முடிவுகளை வெளியிட்டது. 2,500 நிறுவனங்களில், 4 லட்சம் வாடிக்கையாளர்களைச் சந்தித்து தகவல்களைத் திரட்டியது. பன்னிரண்டு மாதங்கள் இந்த கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. முடிவுகள் பின்வருமாறு.
புதிய கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 பதிந்து பயன்படுத்துவது 83%ஆக உள்ளது. விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்திற்குச் செல்பவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைந்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும் இது பாதியாகக் குறைந்து வருகிறது.
ஆனால், டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களில் 60% கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இருப்பது விண்டோஸ் எக்ஸ்பி மட்டுமே. இவை பயன்படுத்தப்படும் ஹார்ட்வேர் சாதனங்கள், சரி செய்திட முடியாத அளவிற்கு மோசமானால் தான், அவற்றின் இடத்தில் வாங்கப்படும் கம்ப்யூட்டர்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வரும்.
பிரவுசர் குறித்த கணக்கெடுப்பில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாடு தொடர்ந்து குறைந்து வருவது கண்டறியப் பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள், பயர்பாக்ஸ் பிரவுசருக்கு மாறி உள்ளனர்.
நிறுவனங்களில் பணியாற்றுகையில், அதன் அலுவலர்கள் பிரவுஸ் செய்திட, குரோம் பிரவுசரையே நாடுகின்றனர். மொத்தத்தில் குரோம் 14% பேரிடமும், பயர்பாக்ஸ் 18% பேரிடமும் காணப்படுகிறது.

நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

கூகுள் தரும் அதிக மெயில் தங்கும் வசதி

அநேகமாக இமெயில் பயன்படுத்துபவர்கள் அனைவருமே, கூகுள் தரும் ஜிமெயில் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். அதிக மெயில் தங்கும் வசதி மற்றும் பல கூடுதல் செயல்பாடு களைக் கொண்டு இயங்குவதால், ஜிமெயில் நம் டிஜிட்டல் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது.
ஜிமெயில் இயக்கப்பட்டவுடன் நமக்குக் கிடைக்கும் இன் பாக்ஸில் 50 மெயில்கள் காட்டப்படும். இதற்கு முந்தைய மெயில்களை நாம் ஐம்பது ஐம்பதாகப் பெற்றுப் பார்க்கலாம். முதல் தோற்றத்திலேயே கூடுதலாகக் காட்டும் படியும் ஜிமெயிலில் செட்டிங்ஸ் அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் முறையில் செயல்படவும்.
பிரவுசரை இயக்கி ஜிமெயில் தளம் செல்லவும். பின்னர், மேலாக வலது மூலையில் உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் Mail Settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு ஜெனரல் டேப்பிற்கு அருகே மேலாக, Maximum Page Size என்பதைப் பார்க்கலாம். இங்கு Show X conversations per page என்ற இடத்தில் உள்ள அம்புக்குறி மீது கிளிக் செய்திடவும். வழக்கமாக இதில் 25 என இருக்கும். இதனை 50 அல்லது 100 என மாற்றி அமைக்கவும். பின்னர், பக்கத்தின் கீழாகச் சென்று Save changes என்பதில் கிளிக் செய்திடவும்.
உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் இன்னும் சற்று நீளமாக மாறியிருப்பதனைக் காணலாம். உங்களுக்கு வந்த படித்த, படிக்காத இமெயில்களை அங்கு சற்றுக் கூடுதலான எண்ணிக்கையில் இப்போது காணலாம்.

நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

திங்கள், 25 ஜூலை, 2011

கூகுள் முக்கிய அறிவிப்பு

கூகுள் அப்ளிகேஷன்களைப் பயன் படுத்துகிறீர்களா! அப்படியானால், வரும் ஆகஸ்ட் 1 முதல், நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், அதன் அண்மைக் காலப் பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும். பழைய பதிப்பு பிரவுசரைப் பயன்படுத்தினால், அதனை கூகுள் சப்போர்ட் செய்திடாது.
http:// www.google.com/support/calendar/bin/answer.py?answer=37057என்ற முகவரியில் உள்ள தனது தளத்தில் இந்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் மற்றும் சபாரி பிரவுசர்களைக் குறிப்பிட்டே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நடப்பில் எந்த பதிப்பினை இந்த பிரவுசர்கள் கொண்டுள்ளனவோ, அந்த பதிப்பினையும், அதற்கு முந்தைய பதிப்பினையும் மட்டுமே, கூகுள் சப்போர்ட் செய்திடும். இதன்படி, ஆகஸ்ட் 1 முதல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7, பயர்பாக்ஸ் 3.5 மற்றும் சபாரி 3 ஆகியவற்றுக்கு சப்போர்ட் கிடைக்காது. 
இந்த பழைய பிரவுசர் பதிப்புகள் மூலம் கூகுள் அப்ளிகேஷன்களைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆனால், கூகுள் தரும் புதிய வசதிகளில் சில இதில் கிடைக்காமல் போகலாம். அவை சரியாகச் செயல்படும் என்ற உத்தரவாதத்தினை கூகுள் தராது. தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கு கூகுள் அப்ளிகேஷன்களுக்குக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தி வருபவர்களுக்கு இதனை கூகுள் ஏற்கனவே அறிவித்துள்ளது. தங்கள் பிரவுசர்களை அப்கிரேட் செய்திட லிங்க்கினையும் தந்துள்ளது. இந்த பிரவுசர்களைத் தந்துள்ள நிறுவனங்களின் தளங்களிலும் இதே போன்ற அறிவிப்பு தரப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு களுக்குக் காரணம் என்ன? கூகுள் தன் மெயில், காலண்டர், டாக்ஸ் மற்றும் தளங்களில் (Mail, Calendar, Docs and Sites), எச்.டி.எம்.எல்.5 (HTML 5) இஞ்சினைப் பயன்படுத்துகிறது. கூகுள் தரும் பல புதிய வசதிகள் இதன் அடிப்படையில் தான் இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக, பைல் ஒன்றை அட்டாச் செய்திட, போல்டரி லிருந்து இழுத்து அமைப்பது (drag and drop attachment), படங்களை இதே போல அமைப்பது, புதியதாக மெயில் வந்துள்ளது என்ற அறிவிப்பு வழங்குவது போன்ற பல செயல்பாடுகள், எச்.டி.எம்.எல்.5 அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இவை குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரின் புதிய பதிப்புகளில் மட்டுமே கிடைக்கின்றன.இதில் ஒரு மோசமான சூழ்நிலையும் உருவாகி உள்ளது. கூகுள் ஆப்லைன் (Google Offline) வசதி இந்த புதிய பிரவுசர்களில் எடுபடவில்லை. இந்த வசதி பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களுக்கான ஆட் ஆன் புரோகிராம்கள் வழி தரப்படுகிறது. இவற்றை கூகுள் Google Gears என அழைக்கிறது. தற்போது இந்த வசதி பயர்பாக்ஸ் 3.6 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் கிடைக்கிறது. இந்த பிரவுசர்களின் புதிய பதிப்பினை நீங்கள் பயன்படுத்தினால், இந்த ஆப் லைன் வசதி கிடைக்காது. ஆனால், கூகுள் இந்த விஷயத்தில் வேகமாகச் செயல்பட்டு வருகிறது. அநேகமாக, இன்னும் இரண்டு மாதங்களில், இந்த ஆப்லைன் வசதியை புதிய பிரவுசர் பதிப்புகளிலும் செயல்படும்படி எச்.டி.எம்.எல்.5 அடிப்படையில் கூகுள் அமைத்துவிடும். தற்போது இந்த ஆப் லைன் வசதி கூகுள் குரோம் பிரவுசரில் கிடைக்கிறது.
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

செவ்வாய், 5 ஜூலை, 2011

டிஜிட்டல் வடிவில் 4 கோடி பக்கங்கள்


பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ள நூல்களை, கூகுள் நிறுவனம் டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுகிறது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் புக்ஸ் மற்றும் பிரிட்டிஷ் லைப்ரேரிக்கும் இடையே இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. காப்புரிமை இல்லாத 2 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இவ்வகையில் வடிவம் பெற உள்ளன. இவை 1700 - 1870 ஆண்டுகளில் வெளிவந்தவை. ஏறத்தாழ 4 கோடி பக்கங்களைப் பொதுமக்கள் டிஜிட்டல் வடிவில் எளிதாகப் பெற்றுப் பயன்படுத்தலாம். இந்த கால கட்டத்தில் தான் அமெரிக்க மற்றும் பிரெஞ்ச் புரட்சிகள் நடந்தேறின. தந்தி அனுப்பும் முறை, பயண ரயில், அடிமைத்தன ஒழிப்பு ஆகியன மக்களை அடைந்ததும் இந்தக் கால கட்டத்தில் தான்.
இந்த டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான அனைத்து செலவுகளையும் கூகுள் ஏற்றுக் கொள்கிறது என்பது இத்திட்டத்தின் சிறப்பாகும். திட்டம் தொடங்கப்பட்டு சில நூல்கள் டிஜிட்டல் வடிவில் வந்துள்ளன. இந்த திட்டம் முடிய சில ஆண்டுகள் ஆகலாம்.
பிரிட்டிஷ் நூலகம் கடந்த 258 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. கூகுள் புக்ஸ் நிறுவனத்துடன் இத்தகைய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 40 ஆவது நூலகம் இது. பிரிட்டிஷ் நூலகம் ஏற்கனவே மைக்ரோசாப்ட் மற்றும் பிரைட் சாலிட் (BrightSolid) நிறுவனங்களுடனும் இது போன்ற ஒப்பந்தத்தினை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறது. என்ற திட்டத்தின் கீழ் இத்தகைய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டு நூல்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் வடிவில் கிடைக்கும்போது, அவற்றை பரிமாறிக் கொள்வது மிக எளி தாகும். உலகில் எங்கிருந்தும் இவற்றை டவுண்லோட் செய்து கொள்ளலாம். ஆய்விற்குத் தகவல்களைத் தேடுவது எளிதாகும். இதன் மூலம் மனித குலத்தின் அறிவுத் தேடல்கள் அனைத்தும் வாழும் மற்றும் வருங்கால சந்ததியினருக்கு கிடைக்கும். அறிவின் படிமங்கள் மட்டுமின்றி, நம் சமுதாயப் பண்பாடு, கலை, சரித்திர நிகழ்வுகளை எதிர்காலத்தில் அனைவரும் பெறும் வாய்ப்பினைப் பெறுவார்கள்.
அனைத்து நாடுகளும், நிறுவனங்களும், சமுதாயமும் இதனைப் பின்பற்ற கூகுள் மற்றும் பிரிட்டிஷ் நூலகமும் பாதை வகுத்துள்ளன என்றால் அது உண்மையான ஒரு கூற்றே.


நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

விண்டோஸ் 8 புதிய தகவல்


விண்டோஸ் 8 குறித்து சென்ற இரண்டு வாரங்களில் பல தகவல்கள் தரப்பட்டன. மைக்ரோசாப்ட் தொடர்ந்து ஏதேனும் புதிய செய்திகளை, விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து வழங்கிக் கொண்டுள்ளது. அவற்றில் சில:


பல மானிட்டர் வசதி: கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோரில், சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை வைத்துப் பயன்படுத்துவார்கள். இந்த பயன்பாடு பல வசதிகளைத் தரும். ஒருவர் இயக்க, பலர் கவனிக்க வேண்டிய செயல்பாடுகள், கற்றுத் தருவதற்கான வழிகளை மேற் கொள்ளுதல் போன்றவற்றிற்கு இது உறுதுணையாக இருக்கும். ஆனால், இதில் ஒரு சில இழப்புகளும் இருந்தன. குறிப்பாக கம்ப்யூட்டருக்கான நேரடி இணைப்பு பெற்ற மானிட்டர் தவிர, மற்றவற்றில் டாஸ்க் பார் கிடைக்காது. இந்த குறை இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நீக்கப் பட்டுள்ளது. கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்டுள்ள அனைத்து மானிட்டர்களிலும், டாஸ்க் பார் தெரியும்படி அமைக்கப் பட்டுள்ளது. “Multiple Display” என்ற புதிய பிரிவு, “Taskbar Properties” டயலாக் பாக்ஸில் தரப்படுகிறது. இவற்றின் மூலம் மற்ற மானிட்டர்களில் டாஸ்க் பார் காட்டப்படும் எனத் தெரிகிறது. ஆனால் அனைத்து செயல்படும் ஐகான்களும் காட்டப்படுமா, அல்லது அடிப்படையில் முதலில் தோன்றும் ஐகான்கள் மட்டும் கிடைக்குமா என இனிமேல் தான் தெரிய வரும்.

நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

பயர்பாக்ஸ் 5 வெளியானது



மொஸில்லா தான் அறிவித்த படியே, பயர்பாக்ஸ் பதிப்பு 5னை சென்ற ஜூன் 21 அன்று வெளியிட்டது. பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த ஒரு தொகுப்பும், ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் பயன்படுத்த ஒரு தொகுப்புமாய், இரண்டு பிரவுசர்கள் வெளியாகியுள்ளன. பயர்பாக்ஸ் பதிப்பு 4 வெளியாகி சில நாட்களிலேயே இது வெளியாகியுள்ளது இங்கு குறிப்பிடத் தக்கது. விண்டோஸ். மேக் சிஸ்டம், லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் போன் என அனைத்து வகை கம்ப்யூட்டர் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் பயர்பாக்ஸ் 5 வெளியாகியுள்ளது. 
பயர்பாக்ஸ் பதிப்பு 3, 2008 ஆம் ஆண்டில் வெளியானது. ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு முன் தான் பயர்பாக்ஸ் 4ன் சோதனைத் தொகுப்பு வெளியாகிப் பின்னர் முழுமையான தொகுப்பும் உடனடியாகக் கிடைத்தது. இப்போது பயர்பாக்ஸ் 5 வந்துள்ளது. இது ஏறத்தாழ, பயர்பாக்ஸ் பதிப்பு 4ல் உள்ள பாதுகாப்பு பிரச்னைகளுக்கான தீர்வுகளுடன் அமைக்கப்பட்ட பிரவுசராக உள்ளது. எனவே பயர்பாக்ஸ் பதிப்பு 4ல் குறை காண்பவர்கள், அதற்குத் தீர்வாக பேட்ச் அப் பைல் எதனையும் எதிர்பார்க்காமல், பதிப்பு 5னை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரவுசரரான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் போட்டியாகவே பயர்பாக்ஸ் வடிவமைப்பும் வெளியிடுவதும் இருந்து வந்தன. இப்போது கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசருடன் மொஸில்லா போட்டியிட வேண்டியுள்ளது. எனவே கூகுள் போலவே, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய பிரவுசர் வெளியிடுவதை வழக்கமாக மொஸில்லா கொண்டுள்ளது.
இன்டர்நெட் உலகம் மிக வேகமாக மாற்றங்களை அடைந்து வருகிறது. அதற்கு ஈடு கொடுக்க, புதிய மாற்றங்களுடன் பிரவுசர்களை மக்களுக்கு வழங்க வேண்டியுள்ளது என, 5 ஆம் பதிப்பினை வெளியிடுகையில், மொஸில்லா தலைமை நிர்வாகி கேரி கொவாக்ஸ் குறிப்பிட்டார்.

இந்த தொகுப்பில் உள்ள புதிய அம்சங்கள்:1.சி.எஸ்.எஸ். அனிமேஷன்களை எளிதாக இயக்கலாம். இதனால் இணைய ஆப்ஜெக்ட்களை திரையைச் சுற்றி அமைக்கலாம். இதனால் டைனமிக் என்ற முறையில் இயங்கும் இணைய தளங்களை எளிதாகப் பார்க்கலாம்.2. இணையத்தில் உலா வருகையில், நம்மைப் பின்பற்றாமல் பிரவுசர் இயங்க வேண்டும். விளம்பரம் மற்றும் பிற சுயநல வேலைகளுக்கு நம்முடைய தனிப்பட்ட விருப்பங்களை, நாம் செல்லும் இணைய தளங்களை அறியும் வகையில் இயக்கங்கள் அமைந்திடும். இதனை இந்த பிரவுசர் தடுக்கிறது. ஆண்ட்ராய்ட் போனுக்கான பிரவுசர் தொகுப்பிலும் இந்த தடுப்பு வசதி தரப்பட்டுள்ளது.3. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில், இரு பரிமாணப்படங்களைத் தரும் கேன்வாஸ் (Canvas) தொழில் நுட்பம் இந்த பிரவுசரில் தரப்பட்டுள்ளது. 4. ஆட் ஆன் பில்டர் (Addon Builder) என்ற ஒரு வசதி இதில் இணைக்கப் பட்டுள்ளது. இது இன்னும் சோதனை முயற்சியிலேயே உள்ளதாகக் கூறப் படுகிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் எக்ஸ்டன்ஷன் எழுதுவதனை இது எளிதாக்கும்.5.பிரவுசர் இயக்கத்திற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 25 இணைய தளங்களை ஒரே நேரத்தில் இதில் திறந்து வைத்து இயக்கினாலும், குறைந்த அளவிலான ராம் மெமரியையே இது பயன்படுத்துகிறது.6. இதில் ஆயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில் வேகம் மற்றும் முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தனியாக அடையாளம் கண்டு நாம் அறிய முடியாது. ஆனால் பெரிய அளவில், அனைத்து வகை செயல்பாடு களிலும் விரும்பத்தக்க மாற்றங்கள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சென்ற பதிப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்திடும் வகையில் உருவாக்கப்பட்டவையே.7. இது ஒரு வேகமான, பாதுகாப்பான மற்றும் திறன் மிக்கது என பிரவுசர் களுக்கான சோதனைகளில் தெரிய வந்துள்ளது. தேவையற்ற விளம்பரங் களை இதில் இணைந்துள்ள ஆட் பிளாக்கர் என்னும் விளம்பரத் தடுப்பு புரோகிராம் தடுக்கிறது.8. ஒரே விண்டோவில் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைத் திறந்து இயக்கலாம். பாதுகாப்பினை முன்னிட்டு, கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் களைத் தடுப் பதற்காக, ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை இந்த பிரவுசர் அனுமதிப்பதில்லை.ஓப்பன் சோர்ஸ் பிரவுசர்களைத் தந்து வரும் மொஸில்லா, தன் பதிப்பு 4ஐ முற்றிலுமாக பெரிய அளவில் மாற்றி அமைத்திருந்தது. அந்த பிரவுசர் 20 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டது என மொஸில்லா அறிவித்திருந்தது. இனி தொடர்ந்து, குறுகிய காலத்தில் அடுத்தடுத்து பிரவுசர்கள் வந்தாலும், ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட இணைய தளங்கள், புதியனவற்றில் இயங்கு வதற்குத் தடை இருக்காது. பயர்பாக்ஸ் 4 அடிக்கடி கிராஷ் ஆவதாகப் பலர் புகார் அளித்திருந்தனர். பதிப்பு 5 அதனைச் சரி செய்துள்ளது. அது மட்டுமின்றி, மொஸில்லா நிறுவனம், இனி பயர்பாக்ஸ் 4 பிரச்னைகளுக்குத் தீர்வளிக்காது. தன் வாடிக்கையாளர்களுக்கு இதனைக் கூறி, பயர்பாக்ஸ் பதிப்பு 5னை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துமாறு மொஸில்லா கூறியுள்ளது. இதுவரை பயன்படுத்தி வந்த ஆட் ஆன் எக்ஸ்டன்ஸன் புரோகிராம்கள், பதிப்பு 5லும் இணைந்து செயல்படும்.வர இருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 6,7,8, 9, 10 ஆகியவையும் முக்கியமானவை யாகவே இருக்கும். இருப்பினும் இந்த பயர்பாக்ஸ் பதிப்பு 5 மட்டுமே, ஆரவாரத்துடன் வெளிவந்துள்ளது. அடுத்தடுத்து பிரவுசர்கள் வர இருப்பதால், இணையதள வடிவமைப் பாளர்களும் ஒரு எதிர்பார்ப்பில் இருப்பார் கள். மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள் என மொஸில்லா தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.வரும் ஆகஸ்ட் மாதம் அடுத்த பதிப்பினை எதிர்பார்க்கலாம்.

நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

Site Counter

free counters

Ads

Friends activity

Free Mp3 downloads

Instant Videos

Blogger Themes

Make Money Online

Affiliate Program ”Get Money from your Website”

டாப் தமிழ் வலைப்பூ இணைப்பு

Make a traffic

Lot of Visitors

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More