கூகுள் அப்ளிகேஷன்களைப் பயன் படுத்துகிறீர்களா! அப்படியானால், வரும் ஆகஸ்ட் 1 முதல், நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், அதன் அண்மைக் காலப் பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும். பழைய பதிப்பு பிரவுசரைப் பயன்படுத்தினால், அதனை கூகுள் சப்போர்ட் செய்திடாது.
http:// www.google.com/support/calendar/bin/answer.py?answer=37057என்ற முகவரியில் உள்ள தனது தளத்தில் இந்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் மற்றும் சபாரி பிரவுசர்களைக் குறிப்பிட்டே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நடப்பில் எந்த பதிப்பினை இந்த பிரவுசர்கள் கொண்டுள்ளனவோ, அந்த பதிப்பினையும், அதற்கு முந்தைய பதிப்பினையும் மட்டுமே, கூகுள் சப்போர்ட் செய்திடும். இதன்படி, ஆகஸ்ட் 1 முதல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7, பயர்பாக்ஸ் 3.5 மற்றும் சபாரி 3 ஆகியவற்றுக்கு சப்போர்ட் கிடைக்காது.
இந்த பழைய பிரவுசர் பதிப்புகள் மூலம் கூகுள் அப்ளிகேஷன்களைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆனால், கூகுள் தரும் புதிய வசதிகளில் சில இதில் கிடைக்காமல் போகலாம். அவை சரியாகச் செயல்படும் என்ற உத்தரவாதத்தினை கூகுள் தராது. தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கு கூகுள் அப்ளிகேஷன்களுக்குக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தி வருபவர்களுக்கு இதனை கூகுள் ஏற்கனவே அறிவித்துள்ளது. தங்கள் பிரவுசர்களை அப்கிரேட் செய்திட லிங்க்கினையும் தந்துள்ளது. இந்த பிரவுசர்களைத் தந்துள்ள நிறுவனங்களின் தளங்களிலும் இதே போன்ற அறிவிப்பு தரப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு களுக்குக் காரணம் என்ன? கூகுள் தன் மெயில், காலண்டர், டாக்ஸ் மற்றும் தளங்களில் (Mail, Calendar, Docs and Sites), எச்.டி.எம்.எல்.5 (HTML 5) இஞ்சினைப் பயன்படுத்துகிறது. கூகுள் தரும் பல புதிய வசதிகள் இதன் அடிப்படையில் தான் இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக, பைல் ஒன்றை அட்டாச் செய்திட, போல்டரி லிருந்து இழுத்து அமைப்பது (drag and drop attachment), படங்களை இதே போல அமைப்பது, புதியதாக மெயில் வந்துள்ளது என்ற அறிவிப்பு வழங்குவது போன்ற பல செயல்பாடுகள், எச்.டி.எம்.எல்.5 அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இவை குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரின் புதிய பதிப்புகளில் மட்டுமே கிடைக்கின்றன.இதில் ஒரு மோசமான சூழ்நிலையும் உருவாகி உள்ளது. கூகுள் ஆப்லைன் (Google Offline) வசதி இந்த புதிய பிரவுசர்களில் எடுபடவில்லை. இந்த வசதி பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களுக்கான ஆட் ஆன் புரோகிராம்கள் வழி தரப்படுகிறது. இவற்றை கூகுள் Google Gears என அழைக்கிறது. தற்போது இந்த வசதி பயர்பாக்ஸ் 3.6 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் கிடைக்கிறது. இந்த பிரவுசர்களின் புதிய பதிப்பினை நீங்கள் பயன்படுத்தினால், இந்த ஆப் லைன் வசதி கிடைக்காது. ஆனால், கூகுள் இந்த விஷயத்தில் வேகமாகச் செயல்பட்டு வருகிறது. அநேகமாக, இன்னும் இரண்டு மாதங்களில், இந்த ஆப்லைன் வசதியை புதிய பிரவுசர் பதிப்புகளிலும் செயல்படும்படி எச்.டி.எம்.எல்.5 அடிப்படையில் கூகுள் அமைத்துவிடும். தற்போது இந்த ஆப் லைன் வசதி கூகுள் குரோம் பிரவுசரில் கிடைக்கிறது. நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக