பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ள நூல்களை, கூகுள் நிறுவனம் டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுகிறது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் புக்ஸ் மற்றும் பிரிட்டிஷ் லைப்ரேரிக்கும் இடையே இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. காப்புரிமை இல்லாத 2 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இவ்வகையில் வடிவம் பெற உள்ளன. இவை 1700 - 1870 ஆண்டுகளில் வெளிவந்தவை. ஏறத்தாழ 4 கோடி பக்கங்களைப் பொதுமக்கள் டிஜிட்டல் வடிவில் எளிதாகப் பெற்றுப் பயன்படுத்தலாம். இந்த கால கட்டத்தில் தான் அமெரிக்க மற்றும் பிரெஞ்ச் புரட்சிகள் நடந்தேறின. தந்தி அனுப்பும் முறை, பயண ரயில், அடிமைத்தன ஒழிப்பு ஆகியன மக்களை அடைந்ததும் இந்தக் கால கட்டத்தில் தான்.
இந்த டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான அனைத்து செலவுகளையும் கூகுள் ஏற்றுக் கொள்கிறது என்பது இத்திட்டத்தின் சிறப்பாகும். திட்டம் தொடங்கப்பட்டு சில நூல்கள் டிஜிட்டல் வடிவில் வந்துள்ளன. இந்த திட்டம் முடிய சில ஆண்டுகள் ஆகலாம்.
பிரிட்டிஷ் நூலகம் கடந்த 258 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. கூகுள் புக்ஸ் நிறுவனத்துடன் இத்தகைய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 40 ஆவது நூலகம் இது. பிரிட்டிஷ் நூலகம் ஏற்கனவே மைக்ரோசாப்ட் மற்றும் பிரைட் சாலிட் (BrightSolid) நிறுவனங்களுடனும் இது போன்ற ஒப்பந்தத்தினை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறது. என்ற திட்டத்தின் கீழ் இத்தகைய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டு நூல்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் வடிவில் கிடைக்கும்போது, அவற்றை பரிமாறிக் கொள்வது மிக எளி தாகும். உலகில் எங்கிருந்தும் இவற்றை டவுண்லோட் செய்து கொள்ளலாம். ஆய்விற்குத் தகவல்களைத் தேடுவது எளிதாகும். இதன் மூலம் மனித குலத்தின் அறிவுத் தேடல்கள் அனைத்தும் வாழும் மற்றும் வருங்கால சந்ததியினருக்கு கிடைக்கும். அறிவின் படிமங்கள் மட்டுமின்றி, நம் சமுதாயப் பண்பாடு, கலை, சரித்திர நிகழ்வுகளை எதிர்காலத்தில் அனைவரும் பெறும் வாய்ப்பினைப் பெறுவார்கள்.
அனைத்து நாடுகளும், நிறுவனங்களும், சமுதாயமும் இதனைப் பின்பற்ற கூகுள் மற்றும் பிரிட்டிஷ் நூலகமும் பாதை வகுத்துள்ளன என்றால் அது உண்மையான ஒரு கூற்றே.
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக