விண்டோஸ் 8 குறித்து சென்ற இரண்டு வாரங்களில் பல தகவல்கள் தரப்பட்டன. மைக்ரோசாப்ட் தொடர்ந்து ஏதேனும் புதிய செய்திகளை, விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து வழங்கிக் கொண்டுள்ளது. அவற்றில் சில:
பல மானிட்டர் வசதி: கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோரில், சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை வைத்துப் பயன்படுத்துவார்கள். இந்த பயன்பாடு பல வசதிகளைத் தரும். ஒருவர் இயக்க, பலர் கவனிக்க வேண்டிய செயல்பாடுகள், கற்றுத் தருவதற்கான வழிகளை மேற் கொள்ளுதல் போன்றவற்றிற்கு இது உறுதுணையாக இருக்கும். ஆனால், இதில் ஒரு சில இழப்புகளும் இருந்தன. குறிப்பாக கம்ப்யூட்டருக்கான நேரடி இணைப்பு பெற்ற மானிட்டர் தவிர, மற்றவற்றில் டாஸ்க் பார் கிடைக்காது. இந்த குறை இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நீக்கப் பட்டுள்ளது. கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்டுள்ள அனைத்து மானிட்டர்களிலும், டாஸ்க் பார் தெரியும்படி அமைக்கப் பட்டுள்ளது. “Multiple Display” என்ற புதிய பிரிவு, “Taskbar Properties” டயலாக் பாக்ஸில் தரப்படுகிறது. இவற்றின் மூலம் மற்ற மானிட்டர்களில் டாஸ்க் பார் காட்டப்படும் எனத் தெரிகிறது. ஆனால் அனைத்து செயல்படும் ஐகான்களும் காட்டப்படுமா, அல்லது அடிப்படையில் முதலில் தோன்றும் ஐகான்கள் மட்டும் கிடைக்குமா என இனிமேல் தான் தெரிய வரும்.
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக