விண்டோஸ் கிராஷ் ஆகி, கம்ப்யூட்டர் பயன்பாடு முடங்கிப் போகும் போது, முந்தைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று இயங்க வைத்திட, விண்டோஸ் சிஸ்டம் தனக்குள் கொண்டிருப்பது சிஸ்டம் ரெஸ்டோர் வசதியாகும். இதனை உருவாக்கிப் பயன்படுத்துவது குறித்து ஏற்கனவே கம்ப்யூட்டர் மலரில் பல கட்டுரைகளும், டிப்ஸ்களும் இடம் பெற்றுள்ளன.
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இந்த சிஸ்டம் ரெஸ்டோர் இன்னும் கூடுதல் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவது எளிது என்றாலும், புத்திசாலித்தனமாக இதனைப் பயன்படுத்தினால் அதிகம் பயன் கிடைக்கும். அதனை எப்படிப் பயன்படுத்துவது என இங்கு பார்க்கலாம்.
1. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புடன் செயல்பாடு: சிஸ்டம் ரெஸ்டோர், உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்புடன் இணைந்து செயல்படுகிறது. சிஸ்டத்தினை மீண்டும் குறிப்பிட்ட ஒரு பழைய நிலைக்குக் கொண்டு வருகையில், சிஸ்டத்தினை ஸ்கேன் செய்திட, ஆண்ட்டி வைரஸ் தொகுப் பினைத் தூண்டுகிறது. சிஸ்டம் ரெஸ்டோர் செய்யப்படுகையில், ஏதேனும் ஒரு பைல் கெடுக்கப்பட்டு இருப்பின், ஆண்ட்டி வைரஸ் அதனை அப்படியே தனியே ஒதுக்கி வைக்கிறது. ஆனால், ரெஸ்டோர் பாய்ண்ட்டில், கெடுதலுக்கு ஆளான பைல் ஒன்று இருந்து, அதனைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பைத் தற்காலிகமாக ஒதுக்கி நிறுத்தி வைத்து, நெட்வொர்க்கிலிருந்து கம்ப்யூட்டரைப் பிரித்து வைத்து, பின்னர் ரெஸ்டோர் பாய்ண்ட்டைப் பயன்படுத்த வேண்டும். ரெஸ்டோர் வேலை முடிந்த பின்னர், ஆண்ட்டி வைரஸ் கொண்டு, கெடுக்கப்பட்ட பைலைச் சரி செய்திட வேண்டும்; அல்லது நீக்க வேண்டும்.
2. ஆண்ட்டி வைரஸாக ரெஸ்டோர் பாய்ண்ட்? ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றுக்கு நாம் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதன் மூலம், ரெஸ்டோர் பாய்ண்ட் வசதியை ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம் என்று எண்ணக் கூடாது. ரெஸ்டோர் பாய்ண்ட் கொண்டிருக்கும் பழைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்வதன் மூலம், கம்ப்யூட்டரைத் தாக்கிய வைரஸிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியும் என்று முடிவெடுக்கக் கூடாது. வைரஸை நம்மால் இந்த வழியில் நீக்க முடியாது. சிஸ்டம் ரெஸ்டோர், யூசர் டேட்டா எதனையும் சரிப்படுத்தாது; எனவே பாதிக்கப்பட்ட பைல், சிஸ்டம் ரெஸ்டோர் செய்யப்படுவதனால் சரியாகாது. எனவே கெட்டுப்போகாத பழைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல முடியாது.
3. ஒன்றுக்கு மேலாக நல்ல ரெஸ்டோர் பாய்ண்ட்ஸ்: சிஸ்டம் ரெஸ்டோர் வசதி, ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளை உருவாக்கி வைத்துக் கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது. விண்டோஸ் சிஸ்டம் அப்டேட் செய்யப்படும் போதெல்லாம், விண்டோஸ் 7 சிஸ்டம் தானாக ரெஸ்டோர் பாய்ண்ட்டுகளை உருவாக்கிக் கொள்கிறது. இருப்பினும், நாமாக, கம்ப்யூட்டர் மிக நன்றாக, அதிகபட்ச திறனுடனும், வேகத்து டனும் செயல்படுகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட ரெஸ்டோர் பாய்ண்ட்டுகளை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்களாக ஏதேனும் அப்டேட் பைலை இயக்கி, கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த முனைவதாக இருந்தால், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்வதாக இருந்தால், அதற்கு முன் உள்ள நிலையில் ஒரு ரெஸ்டோர் பாய்ண்ட் உருவாக்கிக் கொள்வது நல்லது.
நீங்களாக, ரெஸ்டோர் பாய்ண்ட் உருவாக்க, Start அழுத்தி, Computer என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Properties என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு System Protection என்பதில் கிளிக் செய்து, அதில் உள்ள Create பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இங்கு உங்களிடம் பெயர் ஒன்று கேட்கப்படுகையில், அந்த ரெஸ்டோர் பாய்ண்ட்டிற்கு ஒரு பெயரினை நீங்கள் தர வேண்டும். அந்த பாய்ண்ட்டினை அடையாளம் காணும் வகையில் ஏதேனும் ஒரு பெயர் தரலாம். எடுத்துக்காட்டாக, PreService Pack 1 என்றோ, Before Tamil Business installation எனவோ தரலாம்.
4. பாதித்த பைல்களை ஸ்கேன் செய்திடுக: ரெஸ்டோர் செய்திடுகையில், சிஸ்டம் ரெஸ்டோர் டூல், பாதித்த பைல்களை ஸ்கேன் செய்வதாக செட் செய்திடவும். ஏதேனும் புரோகிராம் அல்லது ட்ரைவர் பைல் ஒன்று, பாதிக்கப்பட்டதாகக் காட்டப்படலாம். ஆனால், அவற்றைச் சரிப்படுத்தி, இழக்க நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். அந்நிலையில் ரெஸ்டோர் செய்வதனை நிறுத்தி, அதற்கு முந்தைய ரெஸ்டோர் பாய்ண்ட்டிற்குச் செல்லலாம்.
5. எக்ஸ்பியுடன் டூயல் பூட்டிங்: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி என இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து இயக்கப்பட்டுக் கொண்டிருப்பின், சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்க முற்படுகையில், விண்டோஸ் 7 ரெஸ்டோர் பாய்ண்ட்ஸ் அனைத்தும் நீக்கப்பட வாய்ப்புண்டு. இதனால் இழப்பு நமக்குத்தான். இதற்கு தீர்வாக
http://www.vistax64.com/attachments/tutorials/2647d1202275649systemrestorepointsstopxpdualbootdeletestop_xp.reg?ltr=S என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில், மைக்ரோசாப்ட் தீர்வினைத் தருகிறது. இங்கு கிடைக்கும் பைலை டவுண்லோட் செய்து கொள்க. இந்த பைலின் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Mஞுணூஞ்ஞு என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், இன்ஸ்டலேஷனை ஏற்படுத்த ஓகே கொடுக்கவும். இப்போது பைலில் உள்ளவை விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியுடன் வெற்றிகரமாக இணைக்கப்படும். இதன் மூலம், மீண்டும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் கம்ப்யூட்டர் இயக்கப்படுகையில், ரெஸ்டோர் பாய்ண்ட்டுகள் நீக்கப்பட மாட்டாது.
விண்டோஸ் கொண்டிருக்கும் சிஸ்டம் ரெஸ்டோர் வசதி மிகவும் பயன் தரத்தக்க ஒரு வசதியாகும். கம்ப்யூட்டரை, அது நன்றாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு நிலைக்குக் கொண்டு செல்வது மட்டுமின்றி, நம் பயனுள்ள நேரத்தையும் நமக்கு மிச்சப்படுத்தித் தருகிறது. மேலே சொல்லப்பட்ட டிப்ஸ், இந்த வசதியைப் பயன்படுத்துவதில் கூடுதல் நேரத்தை நமக்கு மிச்சப்படுத்துகிறது.
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments) மற்றும் பின்பற்றுபவர்கள்(followers) மூலமாக!.