மொபைல் விற்பனைச் சந்தையில், இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் உச்ச கட்ட போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியின் கடுமையை நோக்கியா உணர்ந்து அதற்கேற்ற வகையில் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் 40 புதிய மாடல் மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. இவற்றில் 12 மாடல்கள் ஸ்மார்ட் போன்களாக இருக்கும். இந்திய ஸ்மார்ட் போன் விற்பனைப் பிரிவில், சில மாதங்களாக நோக்கியா தவிர்த்த மற்ற நிறுவனங்கள் மிக வேகமாக முன்னேறி, நோக்கியாவின் பங்கினைச் சிறிய அளவிலேனும் கைப்பற்றி வருகின்றன. எனவே இந்த 12 புதிய ஸ்மார்ட் போன்கள் மூலம் நோக்கியா இழந்து வரும் இடத்தைத் தக்க வைத்திட எண்ணுகிறது. இவற்றின் விலை எந்த அளவில் இருக்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அண்மையில் இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேசன் வெளியிட்ட அறிக்கையின்படி, ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், மக்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் போன்களையே அதிகம் விரும்புகின்றனர். இதனை அடுத்து, பிளாக்பெரி, ஐ.ஓ.எஸ்., சிம்பியன், விண்டோஸ் போன் 7 ஆகியவை இடம் பெறுகின்றன. ஆனால் நோக்கியா நிறுவனம் இந்த கணிப்பை உண்மை யென்று ஏற்றுக் கொள்ளவில்லை. இது ஒரு எதிர்பார்ப்பு என்று சொல்லி வருகிறது.
எப்படியோ, மொபைல் மார்க் கட்டில் இயங்கும் நிறுவனங் களுக்கிடையே போட்டி இருந்தால் தான், மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில், நல்ல சேவை கிடைக்கும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக