Blogroll

சனி, 11 ஜூன், 2011

எக்ஸெல் டிப்ஸ்

பெர்சனல் தகவல்கள் பதிவதைத் தடுக்க
எக்ஸெல் தொகுப்பில் புதிய ஒர்க்ஷீட்களை உருவாக்கி, அவற்றில் டேட்டாவினைப் பதிகையில், அந்த ஒர்க்ஷீட் பைலில், நம்முடைய பெர்சனல் தகவல்களும் இணைக்கப்படுகின்றன. பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வகையில் இவை பதியப்படும். இதனால், பைல் ஒன்றை யார் உருவாக்கியது போன்ற தகவல்கள் அனைவருக்கும் தெரிய வரும். இந்த தகவல்களை ஒவ்வொரு பைலின் ப்ராப்பர்ட்டீஸ் சென்று நீக்கலாம். ஒவ்வொரு பைலாக இதனை மேற்கொள்வதைக் காட்டிலும், ஒர்க்ஷீட்கள் உருவாகும்போது இத்தகைய தகவல்களை இணைக்காமல் இருக்க செட்டிங்ஸ் மேற்கொள்ளலாம். இதற்கு Tools > Options என முதலில் தேர்ந்தெடுக்கவும். இங்கு Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்குள்ள டேப்களில் Security டேப்பினைத் தேர்ந்தெடுக் கவும். இப்போது கிடைக்கும் விண்டோ பிரிவில் Remove Personal Information from File Properties on Save என்று இருப்பதைப் பார்த்து, அதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அடுத்து ஓகே கிளிக் செய்து அனைத்தையும் மூடவும். இனி பெர்சனல் தகவல்கள் சேர்க்கப்பட மாட்டா.
எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்கள், கீழே குறிப்பிட்ட வழிகளில் செயல்படவும். இந்த தொகுப்பில் Document Inspector என்று ஒரு வசதியைக் காணலாம். இதன் மூலம் பைல் ஒன்றின் பல தகவல்களைப் பார்க்கலாம். Office பட்டன் கிளிக் செய்து, Prepare | Inspect Document எனச் செல்லவும். இப்போது கிடைக்கும் டாகுமெண்ட் இன்ஸ்பெக்டர் டயலாக் பாக்ஸில், கண்காணிப்பில் இருக்க வேண்டிய விஷயங்களைத் தேர்ந்தெடுத்துப் பின்னர் Inspect என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் ஒர்க் புக்கில் இருக்கும் பெர்சனல் தகவல்களைக் காட்டி, அவற்றில் எவை எல்லாம் இருக்கக் கூடாது என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கும். அவ்வாறே செயல்படலாம்.

டாலரை ரூபாயாக மாற்ற
இது அந்நியச் செலவாணி மாற்றம் குறித்த டிப்ஸ் இல்லை. எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் டாலர் அடையாளத்திற்குப் பதிலாக, ரூபாய் குறித்த சுருக்கு எழுத்துக்கள் அமைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த குறிப்பாகும். முதலில் எந்த ஒர்க் ஷீட்டில் மாற்ற வேண்டுமோ, அந்த ஒர்க் ஷீட்டினைத் திறந்து கொள்ளுங்கள். பின் Format கிளிக் செய்து அதில் Cells என்ற பிரிவைத் திறந்து கொள்ளுங்கள். பின் கிடைக்கும் Format Cells என்ற விண்டோவில் Category கட்டத்தில் Currency என்பதைத் தேர்ந்தெடுத்தால் அதன் வலது புறம் பல்வேறு கரன்சி வடிவங்கள் தரப்படும். அதில் Rs Urudu என இருக்கும்; அதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி அந்த செல்லில் எண்களுக்கு முன் Rs இருக்கும்.

மாதம்,தேதி, நாள் பார்மட்
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தேதிக்கான பார்மட்டினை அமைக்கையில், எப்படி அமைத்தால் எந்த வகையில் நாட்கள் மற்றும் அதற்கான தேதி எண்கள் காட்டப்படும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதோ கொடுக்கிறோம். ஆனால் இப்படி வருகிறது, பரவாயில்லை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இதோ சார்ந்த டிப்ஸ்.
d என்பது ஒரு நாளின் எண்ணைத் தரும் (1, 2, 3, 4 ... 30, 31)
dd என்பது நாளின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (01,02,03)
ddd என்பது நாளினைச் சுருக்கித் தரும் (Mon, Tue ....)
dddd என்பது நாளினை அதன் முழு பெயரில் தரும் (Monday, Tuesday, etc).

மாதத்திற்கான குறிப்புகள்:
m என்பது ஒரு மாதத்தின் எண்ணைத் தரும் (1, 2, 3, 4 ... 30, 31)
mm என்பது மாதத்தின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (01,02,03)
mmm என்பது மாதத்தினைச் சுருக்கித் தரும் (Jan, Feb,....)
mmmm என்பது மாதத்தினை அதன் முழு பெயரில் தரும் (January, February etc).
mmmmm என்பது மாதத்தின் முதல் எழுத்தினைத் தரும் (J, F, M, A,)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Site Counter

free counters

Ads

Friends activity

Free Mp3 downloads

Instant Videos

Blogger Themes

Make Money Online

Affiliate Program ”Get Money from your Website”

டாப் தமிழ் வலைப்பூ இணைப்பு

Make a traffic

Lot of Visitors

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More