தாங்கள் எடுத்த வீடியோ காட்சிகளை மற்றவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு வாய்ப்பினைத் தரும் யு-ட்யூப் தளம் இன்று அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அண்மையில் தன் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடுகையில், தன் தளத்தில் பதிக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகளை, நாளொன்றுக்கு சராசரியாக, 300 கோடி பேர் பார்த்து ரசிப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. இன்னொரு வகையில் பார்த்தால், உலகின் பாதி மக்கள் தொகை, யு–ட்யூப்பில் ஒரே நேரத்தில் காட்சிகளைக் கண்டு களிப்பதாகத் தெரிகிறது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இது 50% கூடுதலாகும். இதிலிருந்து மக்கள் தகவல்களைக் காட்சிகளாகவே பார்த்து ரசிக்க விரும்புகின்றனர் என்று தெரிகிறது.
இந்த தளத்தில் ஒவ்வொரு நிமிடமும் அப்லோட் செய்யப்படும் வீடியோ காட்சிகளைத் தொடர்ந்து பார்த்தால், இரண்டு நாட்கள் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு அதிகமான எண்ணிக்கையில் வீடியோ காட்சிகள் அப்லோட் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 கருத்துகள்:
Hi, you are going to write only tech posts. if so can i add you to my topten.
www.suthanthira-menporul.com
கருத்துரையிடுக