Blogroll

சனி, 11 ஜூன், 2011

வேர்ட் டிப்ஸ்

டயலாக் பாக்ஸ் தாமதமாகிறதா?
வேர்ட் தொகுப்புகளைப் பயன் படுத்துபவர்கள், சில ஆண்டுகளில் தங்களிடம் உள்ள வேர்ட் புரோகிராமில், டயலாக் பாக்ஸ் தோன்ற சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள்வதனைக் காணலாம். எடுத்துக்காட்டாக சொற்களைத் தேடி அறிய Find and Replace டயலாக் பாக்ஸ் கிடைக்க கண்ட்ரோல் + எப் அழுத்துவோம். இந்த பாக்ஸ் கிடைக்க 15 முதல் 20 விநாடிகள் கூடுதல் நேரம் ஆகலாம். இது போன்ற பிரச்னைகளை நாமே தீர்த்து வைக்கலாம்.
இந்த பிரச்னை வேர்ட் தொகுப்பால் ஏற்படுவதில்லை. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினால் ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த பிரச்னைக்கு, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க் தான் காரணமாக இருக்கும். இதற்கும் ஹார்ட் ட்ரைவிற்கும் என்ன தொடர்பு இருக்கும்? என்ற கேள்வி எழுகிறதா?
விண்டோஸ் தன் செயல்பாடுகளுக்கு ஹார்ட் ட்ரவையே சார்ந்துள்ளது. உங்கள் கம்ப்யூட்டரில் ராம் மெமரி அதிகம் இல்லாத போது, விண்டோஸ் மெமரிக்கும் ஹார்ட் ட்ரைவிற்கும் இடையே தகவல்களை மாற்றிக் கொள்ளும். ஹார்ட் ட்ரைவ் வேறு பல காரணங்களினால், தகவல்களை மாற்றிக் கொள்வதில் நேரம் எடுத்துக் கொண்டால், அது வேர்ட் போன்ற புரோகிராம்கள் இயக்கத்தில் எதிரொலிக்கிறது.
இதற்குத் தீர்வு தான் என்ன? ஹார்ட் டிஸ்க்கினை (defrag) டிபிராக் செய்திடலாம். இதனால் பைல்கள் ஒழுங்கான முறையில் ஹார்ட் டிஸ்க்கில் அடுக்கப்பட்டு, தகவல்கள் பரிமாறப்பட வழி கிடைக்கும்.
ஒரே நேரத்தில் பல புரோகிராம்களை இயக்கும் போதும் இந்த பிரச்னை ஏற்படலாம். அனைத்து புரோகிராம்களும் கம்ப்யூட்டரின் திறனையும், மெமரியின் இடத்தையும் பங்கிட்டுக் கொள்வதால், வேர்ட் இயங்க அதற்கான திறன் கிடைக்காமல் இருக்கலாம். இந்த இயங்கும் புரோகிராம்கள் டாஸ்க்பாரில் காட்டப்படுகின்றன. அவற்றைப் பார்த்து, அப்போது நீங்கள் அதிகம் பயன்படுத்தாத புரோகிராம்களைத் தற்காலிகமாவது மூடி வைக்கலாம்.
மேலே குறிப்பிட்டவை மூலமும், உங்கள் வேர்ட் பிரச்னை தீரவில்லை என்றால், உங்கள் சிஸ்டத்தில் உங்களால் காண முடியாத பிரச்னை ஏதோ இருக்கிறது என்று தெரிகிறது. இது வைரஸ், மால்வேர் போன்றவற்றினாலும் ஏற்படலாம். இத்தகைய கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களும், கம்ப்யூட்டரின் திறனைப் பெருமளவில் திருடிக் கொள்வதால், மற்ற புரோகிராம்கள் இயங்குவதற்குத் தேவையான திறன் கிடைக்காமல் இருக்கலாம். இவற்றை நல்லதொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு நீக்க வேண்டும்.

பக்கத்தில் கர்சர் நகர்த்தல்
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணு கிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும். என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத் திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல் லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா!

பாரா நகர்த்தல்:
சில வேளைகளில் நாம் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு முழு பாராவை டாகுமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு காப்பி அல்லது கட் மற்றும் பேஸ்ட் கட்டளை எல்லாம் வேண்டாம். எந்த பாராவினை நகர்த்த வேண்டுமோ அதனுள்ளாக கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்தியவாறு அப் ஆரோ அல்லது டவுண் ஆரோவினை அழுத்தினால் பாரா மேலே கீழே முழுதாகச் செல்லும்.

டாகுமெண்ட் செலக்ஷன்
வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட் முழுவதையும் ஒரே மவுஸ் கிளிக்கில் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு மவுஸ் பாய்ண்ட்டரை இடது பக்கம் உள்ள மார்ஜின் ஓரத்திற்குக் கொண்டு செல்லவும். அது வலது பக்கம் சற்று சாய்ந்த மேல் நோக்கிய அம்புக் குறியாக மாறும். உடன் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொள்ளுங்கள். பின் இடது மவுஸ் பட்டனை அழுத்துங்கள். டாகுமெண்ட் முழுவதும், அது எத்தனை பக்கங்களாக இருந்தாலும் உடனே செலக்ட் செய்யப்படும்.
இதனை இன்னொரு வழியிலும் நிறைவேற்றலாம். அம்புக் குறியை இடது ஓரத்திற்குக் கொண்டு சென்றவுடன் மூன்று முறை இடது மவுஸ் கிளிக் செய்திடவும். டாகுமெண்ட் முழுவதும் செலக்ட் ஆகி நிற்கும்.

டயலாக் பாக்ஸ்கள் திறக்க
டேப்ஸ் டயலாக் பாக்ஸ் வேண்டுமா? மேலே உள்ள ரூலர் அருகே கர்சரைக் கொண்டு சென்று ரூலரின் கீழாக கர்சரை அமைத்து டபுள் கிளிக் செய்தால் டேப் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அப்போது ஒரு டேப் மார்க் ஒன்று உண்டாகும் .இதனை நீக்க வேண்டும் என எண்ணினால் டேப் டயலாக் பாக்ஸில் அதனைச் செய்யலாம்; அல்லது அதன் மீது கர்சரை வைத்து மேலே இழுத்துச் சென்று விடலாம்.
உடனே இடது பக்கம் ரூலரில் இது போல செய்தால் என்ன நடக்கும் என்று பார்க்க ஆசையாய் இருக்குமே! இடது பக்கம் ரூலரில் மேலே சுட்டிக் காட்டியது போல் செய்தால் பேஜ் செட் அப் பாக்ஸ் கிடைக்கும்.

விருப்பமான இடத்தில் மெனு பட்டன்கள்
நாம் அன்றாடம் வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துகிறோம். அதில் மேலாக உள்ள மெனு பட்டன்களை அவற்றின் வழக்கமான இடங்களில் வைத்துப் பார்த்து தேர்தெடுக் கிறோம். சில வேளைகளில் இவை இடம் மாறி, வேறு ஒரு இடத்தில் இருந்தால் நல்லது என்று எண்ணுவோம். ஆனால் அதற்கு என்ன செய்வது என்று எண்ணாமல் விட்டுவிடுவோம். இதற்கான வழியை இங்கு காண்போம்.
இதற்கு முதலில் Alt கீயை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங்கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு நான்கு முனை சக்கர அம்பாக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டு விடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் மெனு பாரில் பட்டன்கள் அமைந்திருக்கும்.

டேபிளில் வரிசையாக எண்களை அமைக்க
வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள Numbering என்ற ஐகானை அழுத்தவும். வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட் அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம்.

டேபிளில் பார்டர்களை நீக்க
வேர்டில் டாகுமெண்ட் இடையே டேபிள் ஒன்றை உருவாக்கும்போது, வேர்ட் அந்த டேபிளில் பார்டர் கோடுகளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றபடி கோடுகளை செல்களைச் சுற்றிலும் அமைத்துத் தரும். ஏதேனும் காரணத்தினால் இந்த கோடுகள் உங்களுக்குத் தேவையில்லை என்று எண்ணினால் அதனை நீக்கலாம். இதற்கான பல வழிகளில் எளிய வழி ஒன்று உள்ளது. கண்ட்ரோல் + ஆல்ட் +யு (Ctrl+Alt+U) கீகளை அழுத்தினால் பார்டர் கோடுகள் நீக்கப்படும். இந்த கீகளை அழுத்தும் முன் கர்சர் ஏதேனும் ஒரு செல்லில் இருக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Site Counter

free counters

Ads

Friends activity

Free Mp3 downloads

Instant Videos

Blogger Themes

Make Money Online

Affiliate Program ”Get Money from your Website”

டாப் தமிழ் வலைப்பூ இணைப்பு

Make a traffic

Lot of Visitors

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More