குரோம் உலாவியில் நாம் ஒரு வலைப்பக்கத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம் அத்தளத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தின் அளவை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் அந்த புகைப்படத்தை காப்பி செய்து அல்லது வேறு ஏதாவது மென்பொருள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும் ஆனால் இனி படத்தை மட்டுமல்ல படம் வலது பக்கத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது இத்தளத்தில் லோகோ size என்ன என்பது முதல் அத்தனையும் அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தற்போது அனைத்து நண்பர்களும் தங்களுக்கென்று அல்லது தங்கள் நிறுவனத்திற்கென்று சொந்தமாக வலைப்பூ உருவாக்கி கொள்கின்றனர் பல நேரங்களில் நமக்கு ஒரு தளத்தின் வடிவமைப்பு பிடித்திருக்கும் ஆனால் அதன் அளவுகளை துல்லியமாக தெரிந்துகொள்ள நாம் போட்டோஷாப் போன்ற மென்பொருட்களைத் தான் தேடிச்சென்றிருப்போம்.ஆனால் இனி நம் குரோம் உலாவியில் இருந்து கொண்டே ஒரு வலைப்பூவில் இருக்கும் அனைத்தின் அளவையும் எளிதாக அறியலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : https://chrome.google.com/webstore/detail/aonjhmdcgbgikgjapjckfkefpphjpgma#
கூகிள் குரோம் உலாவியில் நாம் இத்தளத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி நிறுவலாம் அடுத்த சில நொடியில் குரோம் டூல்பாரில் நமக்கு (ஸ்கேல் ) படம் 1-ல் உள்ளது போல் வந்துவிடும். இனி அந்த ஸ்கேல்-ஐ சொடுக்கி எந்த ஒரு தளத்திலும் உள்ள ஒரு படத்தின் அளவு முதல் படத்திற்கு வலது பக்கம் எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்பது முதல் ஒவ்வொரு பின்னோட்டத்திற்கும் எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்பது வரை அனைத்தும் அறியலாம். வலைப்பதிவர்களுக்கும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கும் கண்டிப்பாக இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments) மூலமாக!.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக