கம்ப்யூட்டரில் இணையத்தில் தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கையில், உங்களிடம் உள்ள பிளாஷ் ப்ளேயர், குயிக் டைம் புரோகிராம், ஸ்கைப் போன்ற ஏதேனும் ஒன்றுக்கான அப்டேட் தயாராக இருப்பதாகவும், அதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும் என்று ஒரு பாப் அப் செய்தி கிடைக்கும். உடனே நாம் அதாகத்தானே செய்தி வந்துள்ளது என்று எண்ணி, உடனே அப்டேட் செய்திட இசைவு தரும் பட்டனில் கிளிக் செய்திடுவோம். இங்கு தான் நாம் மாட்டிக் கொள்கிறோம்.
இது போன்ற அறிவிப்புகளுக்குப் பின்னர், அந்த இணைய தளங்களிலிருந்து புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்த முனையும் போது கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலான வைரஸ் மற்றும் பிஷ்ஷிங் புரோகிராம்கள் இந்த முறையில் தான் இறங்குகின்றன. பின் நம் கம்ப்யூட்டரை முடக்குகின்றன. பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்புகின்றன. எனவே வெப்சைட்டிலிருந்து புரோகிராம்களை டவுண்லோட் செய்திடும் முன் அந்த வெப்சைட் அதிகார பூர்வமானதா என்று ஒரு முறைக்கு இரு முறை கவனிக்கவும். வைரஸ் பரப்பும் நோக்கமுடையவர்கள் பெரும்பாலும் பிரபலமான நிறுவனங்களின் பெயர்களில் மாற்றம் தெரியாத வகையில் ஒரிரு எழுத்துக்களில் மாற்றம் செய்து அல்லது அப்படியே பெயர் அமைத்து வெப்சைட்டுகளை உருவாக்கி இவற்றைப் பரப்புகின்றனர். எடுத்துக் காட்டாக குயிக் டைம் என்ற மீடியா பிளேயர் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் பெயரில் ஒரு வெப்சைட் திறக்கப்பட்டுள்ளது. நாம் நம் கம்ப்யூட்டரில் குயிக் டைம் பிளேயரை வைத்திருந்தால் அது அறிந்து கொண்டு இந்த சாப்ட்வேருக்கு அப்டேட் பைல் உள்ளது; இந்த லிங்க்கில் கிளிக் செய்திடவும் என்று மெசேஜ் அனுப்புகிறது. நாம் கிளிக் செய்தால் சிறிது நேரத்தில் வைரஸ் புரோகிராமினை நம் கம்ப்யூட்டரில் பதித்துவிட்டு அப்டேட் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிக்க இயலவில்லை என்ற செய்தியைத் தந்துவிட்டு மறைந்துவிடுகிறது. அடுத்த முறை கம்ப்யூட்டர் இயக்கும்போது வைரஸ் உடனடியாகச் செயல்பட்டு அனைத்து நாச வேலைகளையும் மேற்கொள்கிறது. இதே போல மைக்ரோசாப்ட், விண் ஆம்ப் போன்ற தளங்களின் பெயர்களிலும் போலி வெப்சைட்டுகள் உருவாக்கப் பட்டு வைரஸ்கள் பரப்பப் படுகின்றன. எனவே இது போன்ற தளங்களில் இருந்து புரோகிராம்களை டவுண்லோட் செய்திடும் முன் அந்த தளங்களின் ஹோம் பேஜ் சென்று அவை உண்மையிலேயே அந்த நிறுவனத் தளங்கள் தானா என்று உறுதி செய்து கொண்டு பின் டவுன்லோட் செய்திட வேண்டும்.
அடுத்ததாக டவுண்லோட் செய்திடத் தொடங்கும் முன் நமக்கு அந்த புரோகிராமினை இயக்கவா அல்லது சேவ் செய்திடவா என்று ஆப்ஷன் கேட்கப்படும். அப்போது ஒரு தனி போல்டரில் இதனை சேவ் செய்திடவும். சேவ் செய்தபின் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராம் மூலம் சோதனை செய்த பின்பே இன்ஸ்டால் செய்திடவும்.

நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments) மற்றும் பின்பற்றுபவர்கள்(followers) மூலமாக!.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக