Blogroll

திங்கள், 27 ஜூன், 2011

My computer இல் மறைந்து போன சிடி டிரைவை மீட்பது எப்படி?




கணிணியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது சிடி/டிவிடி டிரைவ் ஆகும். இவை இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் (Secondary storage device) எனப்படும். சில நேரங்களில் சிடி டிரைவில் எதாவது ஒரு சிடியைப்போட்டு பார்த்தால் கணிணியின் My computer இல் சிடி டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது சிடி டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ளே செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணிணியில் காட்டப்படாமல் இருக்கலாம். இதை எப்படி சரி செய்வது?

1.முதலில் Device Manager இல் சிடி டிரைவ் இயல்பு நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள். Device manager செல்ல டெஸ்க்டாப்பில் உள்ள My computer ஐகானை வலது கிளிக் செய்து Manage மெனுவை கிளிக் செய்யவும். அதில் இடதுபக்கமுள்ள பகுதியில் Device Manager என்பதை கிளிக் செய்தால் வலது பக்கம் நமது கணிணியில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் பட்டியல் தெரியும். அதில் DVD / Cd Rom devices என்பது Enable ஆக உள்ளதா என சோதிக்கவும்.

Cd drive not detecting problem
2.உங்கள் கணிணியின் சிபியுவில் சிடி/டிவிடி டிரைவை இணைக்கும் IDE Cable சரியாக உள்ளதா எனவும் உடைந்திருக்கிறதா எனவும் சரிபார்க்கவும்.

3.மேற்கண்டவை சரியாக இருந்தும் கணிணியில் சிடி டிரைவ் தெரியவில்லை என்றால் Registry இல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம் காணாமல் போன சிடி டிரைவை மீட்கலாம்.

Start-> Run சென்று regedit என்று தட்டச்சிட்டு எண்டர் செய்யவும். இப்போது கணிணியின் Registry Editor திறக்கப்படும். பின்னர் கீழ் உள்ள கீயை கண்டுபிடிக்கவும். நீங்கள் தேர்வு செய்த Key சரியானது தானா என்பதை உறுதி செய்ய அதன் வலதுபக்கம் சிடி/டிவிடி டிரைவ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Class\{4D36E965-E325-11CE-BFC1-08002BE10318}

Cd drive not detecting problem
இந்த கீயை கிளிக் செய்து வலது பக்கம் உள்ள பட்டியலில் UpperFilters, LowerFilters ஆகிய Subkey கள் இருந்தால் இரண்டையும் அழித்துவிடவும். அழிப்பதற்கு வலது கிளிக் செய்து Delete கொடுக்கவும். ஒரு முறை கணிணியை ரீஸ்டார்ட் செய்து விட்டு பார்க்கவும்.

நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments) மற்றும் பின்பற்றுபவர்கள்(followers) மூலமாக!.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Site Counter

free counters

Ads

Friends activity

Free Mp3 downloads

Instant Videos

Blogger Themes

Make Money Online

Affiliate Program ”Get Money from your Website”

டாப் தமிழ் வலைப்பூ இணைப்பு

Make a traffic

Lot of Visitors

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More